Wednesday, November 4, 2009

திருக்குறள்:133 (ஒழுக்கமே குல உயர்வு...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 133

ஒழுக்கமே குல உயர்வு...

In English

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

பொழிப்புரை :
[நல்] ஒழுக்கம் கொண்டிருத்தல் [உயர்] குடிமை; [ஒழுக்கமற்ற] இழுக்கம் கொண்டிருத்தல் இழிந்த பிறப்பாய் [ஆக்கி] விடும்.

விரிவுரை :
நல் ஒழுக்கம் கொண்டிருத்தலே உயர் குடிமை எனப்படும். ஒழுக்கமற்ற இழுக்கம் அதாவது தீயொழுக்கம் கொண்டிருத்தல், எத்தகைய உயர்குடியினன் ஆயினும், அவனது பிறப்பையே அஃது கேவலப்படுத்தி இழிந்த பிறப்பாய் ஆக்கி விடும்.

உயர் குடிமை, குலம் என்பது ஆக ஒழுக்கத்தால் ஆக்கப்பட்டது. ஒழுக்கமற்ற அல்லது தீயொழுக்கத்தன்மை இழுக்கத்தையும், இழிவையும் நல்குவதோடு, பிறவியில் அவனது பெற்றோர்களின் ஒழுக்கத்தின்பலனாய் உயர் குலத்தானாக இருந்திருப்பினும், ஒழுக்கக் கேட்டால் அவனது குலத்தையே, பெற்ற பெற்றோரையே, குடும்பத்தையே இழிவு செய்து, கேவலப்படுத்தித் தாழ்த்தி விடும்.

பிறவி ஒழுக்கம் எனபடுவது; பிறப்பால் வரும் குலம் என்பது, பரம்பரையாக வரும் குடும்ப குண நலன் அதாவது பிறவிக் குணமே. அதாவது பெற்றோரின் ஒழுக்கத்தின்பால் கிட்டிய அல்லது சுட்டப்படும் குண நலன். அவை சமுதாயத்தில் நல்லாரின் பிள்ளை, பொல்லாதவரின் பிள்ளை என்று அடையாளப்படுத்த உதவினும், ஒருவனது தனிப்பட்ட ஒழுக்கத்தின்பால் ஏற்படும் களங்கம் அவன் பிறவியைச் சந்தேகிக்கவும், பிறவிக்கு இழுக்கையும் ஏற்படுத்தும் என்பதே வள்ளுவர் காட்டும் குறிப்பு. எனவே பிறவியால் உயர்குலம் என்பதும், தாழ்ந்த குலம் என்பதும் அவரவர் ஒழுகும் ஒழுக்கத்தின் வேறுபாடேயன்றி அவை சாதியையோ அன்றில் வேறு காரணுங்களான தாழ்ச்சி, உயர்ச்சியையோ குறிக்கவில்லை என்பது தெளிவு.

ஆக நல் ஒழுக்கம் கொண்டிருத்தல் உயர் குடிமை ஆகும்; இழுக்கம் கொண்டிருத்தல் இழிந்த குடிப்பிறப்பாகும்.

குறிப்புரை :
நல் ஒழுக்கமே உயர்ந்த குடி எனும் தகுதியைத் தரும்; அல்லாதது பிறவியையே கேவலத்திற்கு உள்ளாக்கும்.

அருஞ்சொற் பொருள் :
குடிமை - குடிப்பிறப்பு, கால்வழி, உயர்குடிப் பண்பு, நாட்டின் குடிமகன் எனும் தன்மை, குடியுரிமை
(lineage, descent, nobility of birth, cizenship)
இழிந்த - இழிவான, கேவலமான
பிறப்பு - பிறத்தல், பிறவி, தோற்றம், குடி, குலம்

ஒப்புரை :

திருமந்திரம்: 2079
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

திருமந்திரம்: 2080
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே.

திருமந்திரம்: 2081
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே.

திருமந்திரம்: 2082
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே.

திருமந்திரம்: 2083
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே.

37. கேடு கண்டு இரங்கல்

திருமந்திரம்: 2084
வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.

ஔவையார். நல்வழி:
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஔவையார். கொன்றை வேந்தன் :
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 133

Discipline is the nobility...




In Tamil

ozhukkam udaimai kudimai; izhukkam
izhintha piRappAy vidum.

Meaning :
Having discipline is of high and noble lineage. Indiscipline makes downcast and ignoble the birth.

Explanation :
Having good discipline is known as noble lineage. Having indiscipline or bad behaviors, regardless of any good lineage by birth, will downcast and render the birth ignoble.

High and noble lineage is made by good principles and disciplines. Indiscipline, bad behavior and violation of social codes only create blemish, ignominy and dishonor. And it destroys even the parental goodwill though they might be of noble by their deeds. It spoils and brings irreparable disgraces to the family lineage and makes complete downcast.

Birth nobleness and virtuousness comes through family and ancestrally also known as the goodness or the birth characteristics. That actually means the good character and attributes of the parents. Though it gives an identity to one self that from a good or bad family background and also gives social status, the blemish created through indiscipline by one actually makes others to doubt one's birth, and yields disgrace to it, is the point made by Valluvar here. Therefore it is very clear that nobility or lowliness by birth is only through the differences to the adopted virtuousness by each individual and does not mean caste or any other reasons.

Therefore having good virtuousness is of high class; and having the bad is of low class.

Message :
Good discipline alone gives the status of high class lineage; absence of it can downcast the birth itself.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...