Tuesday, November 10, 2009

திருக்குறள்:139 (தீயவை பகரா ஒழுக்கம்...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 139

தீயவை பகரா ஒழுக்கம்...

In English

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே-தீய
வழுக்கியும், வாயால் சொலல்.

பொழிப்புரை :
ஒழுக்கம் உடையவருக்கு இயலாதே - தீய சொற்களைத் தவறியும் வாயால் சொல்லுதல்.

விரிவுரை :
ஒழுக்கம் உடையவருக்குப் பொருந்தாதே, தீமை பயக்கும் சொற்களைத் தவறியும் தம் வாயால் சொல்லுதல்.

எண்ணத்தில் ஒழுக்க சிந்தனை உடையவருக்கு மறந்தும் அன்றில் நாக்குத் தவறி அல்லது வாய் குழறிக் கூட தீய
சொற்கள் வருவதில்லை. நேர்மறை எண்ணங்களும், நல்லன பேசி அல்லன தவிர்க்கும் ஒழுக்கம் ஆழ் மனத்திலே
கொண்டிருப்போரும் எதிர்மறை எண்ணத்தை, தீமை பயக்கும் வார்த்தையை, பயனிலாச் சொல்லை மறந்தும்
உச்சரிக்க மாட்டார்கள். தீச் சொற்களைப் பயன்படுத்துவதால் பிறருக்கு என்ன தீங்கிழைக்குமோ அதே பயனைச்
சொல்வோருக்கும் வழங்கும் எனும் நுணுக்கம் அறிந்தோரால், எப்படி அவற்றைப் பயன் படுத்த இயலும்?

எனவே, ஒழுக்கம் எனும் நற் பண்பு உடையோர் தீச் சொற்களை மறந்தும் அன்றில் தவறியும் சொல்ல
மாட்டார்கள்; சொல்லக் கூடாது என்பதே வள்ளுவர் தரும் மறை பொருள்.

குறிப்புரை :
ஒழுக்கமுடையோர் தீச் சொற்களைத் தவறியும் சொல்லார்.

அருஞ்சொற் பொருள் :
ஒல்லுதல் - இயலுதல், உடன்படுதல், பொருந்துதல், பொறுத்தல்

ஒப்புரை :

திருமந்திரம்: 2113
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே.

திருமந்திரம்: 2114
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

திருமந்திரம்: 2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி அதுவிரும் பாரே.

திருமந்திரம்: 2116
நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

திருமந்திரம்: 2117
இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே.

திருமந்திரம்: 2118
பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

ஔவையார். ஆத்திச்சூடி:
2. ஆறுவது சினம்.
32. கடிவது மற.
47. சீர்மை மறவேல்.

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 139

Disciplined utters not ill...




In Tamil

ozhukkam udaiyavarkku ollAvE-thIya
vazhukkiyum, vAyAl solal.

Meaning :
It is improper to the disciplined, to utter the ill even by slip of the tongue.

Explanation :
It is inappropriate and unconventional for the righteous people to utter ill words even by slip of the tongue.

Those who are disciplined in their thoughts will never tell foul words even by slips of tongue or gabble or
babble. That who planted deep in their subconscious mind only Positive thinking and speak only good and
avoid ill, will never utter negative thoughts, ill and useless words even by any mistakes. Those who knew the
nuances that uttering bad words and negative statements causes damages not only to the opponent but also
equally to the self, how can they utter them?

Therefore, the good disciplined will never utter the ill even by slips; and hence they should never utter is the
implicit meaning here by Valluvar.

Message :
Disciplined do not utter ill even by slip of the tongue.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...