Sunday, November 15, 2009

அதிகாரம்:15. பிறனில் விழையாமை - முகவுரை

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை.

முகவுரை

Chapter : 15

Non-adultery

Preface

பிறன் இல்லத் துணை மீது மோகம் கொள்ளாமை. காமத்தால் தவறான உறவுகளில் திழைக்காமை.

இல்லறத்தில் தாம்பத்திய ஒழுக்கம் முக்கியமானது. அதாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மனம் ஒருங்கி, கருத்தொருமித்து, சபை, சமூகம், ஊர், உலகம் அறிய மணம் முடித்த பின்னரே தாம்பத்திய உறவில் ஈடுபடுவது, மற்றும் கட்டுக் கோப்பான குடும்ப வாழ்வில், காம சுகத்தை கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடத்தும் மாத்திரமே பரிமாறிக் கொள்வது.

இதில் வாழ்வின் எந்த ஏற்றத் தாழ்விற்கும் மனம் மாறாது, சபை அறியச் செய்த திருமண ஒப்பந்தத்திற்கு; சத்தியத்திற்கு இணங்கிக் கட்டுப்பட்டு இறுதி வரையில் இன்பத்திலும், துன்பத்திலும் உறுதியுடன் நின்று இல்வாழ்க்கையை நடத்துவது. இல்லற இன்பத்தில் காமம் என்பது ஒரு பகுதியே. கணவனோ, மனைவியோ இல்லற இன்பம் துய்க்க இயலாதவராக இருப்பினும் கூட ஒருவரை ஒருவர் மதித்து, நம்பி, திருமணத்தைப் புனிதமாக நினைத்து இறுதிவரை சிற்றின்பமின்றி வாழுதலே ஒழுக்கமுடைய இல்லற வாழ்க்கை.

தாம்பத்தியம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் இடையினில் மட்டுமே இருக்க வேண்டிய புனித உறவு, காம ஒப்பந்தம். அது தனிப்பட்டுப் போன வாழ்வாகினும், சேர்ந்து வாழும் வாழ்க்கையாகினும், அயல் தேசங்களிலோ அன்றில் வெவ்வேறு இடங்களிலோ பிரிந்து வாழும் வாழ்வாகினும் விட்டு விடாது இருக்க வேண்டிய சீரிய ஒழுங்கு. மனிதர்களை மிருகத்தினிடமிருந்து வேறு படுத்தும் மேன்மையான வாழ்க்கை முறை. இதுவே மனிதப் பண்பாட்டின் அடி நாதம். மனித குலக் கலாச்சாரத்தின் அடித் தளம்.

அனேகமான பறவைகள் ஒன்றுக்கு ஒன்று என்னும் ஜோடிகளாக, எழுதப்படாத ஒழுங்கில் இயற்கையாகவே வாழுகின்றன. அவற்றிடம் கள்ள ஒழுக்கம் என்பது இல்லை. ஒருவேளை அதனால்தான் அவை உயரே பறக்கின்றனவோ என்பது ஆராயப்படவேண்டியது. ”அன்றில்” பறவை என்னும் பறவை இனத்தில், ஒரு பறவை இறந்து விட்டால் அதன் ஜோடிப் பறவை இறந்து விடுகின்றது. எனவேதான் தன் ஜோடியில் ஒன்று அன்றில் ஒன்று வாழாத அதனை ’அன்றில்’ பறவை என்றார்கள்.

மனிதர்கள் சமூக அமைப்பில் வாழத் துவங்கி, பெண்ணிற்காகப் போராடி வெற்றி பெற்றவனே பெண்ணைச் சேர்ந்த காலங்கள் என்பது மாறி, மறைந்து காமம் ஒழுகுவதையும், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நிலையில் கணவன் மனைவி என்றும், அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைப் பங்குதாரர்களாக வலம் வர திருமணம் என்னும் கலாச்சார உயர்வடைந்து, குடும்ப எல்லைகள் வகுத்து, மான, அவமானங்கள் என்பதை அறிந்து மதித்து, இல்லற இன்பம் ஏகி, சந்ததியினரை உருவாக்க அமைத்துக் கொண்டதே இன்று நாம் வாழும் மேம்பட்ட, நாகரீக சமூக இல்லற வாழ்கை முறை.

இதில் இன, மொழி வரைமுறைகளை மீறிய காதல் கூட பல வேளைகளில் சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் காமத்தை அல்ல. திருமணத்திற்குப் பிறகு காமம் என்பதே தலையாய தனிமனித ஒழுக்கம். திருமணத்திற்கு முந்தைய காமம் ஒழுங்கீனமானது. அதைப்போன்றே அதனினும் ஒழுங்கீனமானது, திருமணத்திற்குப் பிறகு, இல்லற எல்லைகளை மீறிய; உறவுகளை மீறிய, காமத் தேடல் என்பது. அதில் விலைமகளிரைத் தேடுவது; தழுவுவது; பிறன் மனைத் துணையை நாடுவது என்பது எல்லாம் ஒழுக்கமற்ற செயல்களே. பாவங்களே.

இங்கே பிறன் மனையாளை எண்ணுவது என்பதே சமூகக் கட்டமைப்பின், இல்லற அமைப்பின் ஒழுங்கிற்குச் சீர் கேடு தானே. இவையே கலாச்சார அழிவிற்கு, இழிவுடை வாழ்விற்கு, கீழ்த்தரமான வாரிசுகளை உருவாக்க வழி வகுக்கின்றது. ஒரு நிமிடத் தவறிற்காக, தமது வாழ்க்கையை மட்டுமன்றி சம்பத்தப்பட்டவரின் வாழ்க்கையையும், இரு குடும்பங்களின் நலனையும், அக்குடும்பங்களைச் சார்ந்தோரின் வாழ்க்கையையும் பாதித்து, அவமானத்திற்கு உள்ளாக்கி, பல சமயங்களில் பலரின் மரணங்களுக்கும் காரணமாகி விடுகின்றது. வாழ்க்கையை நரகப் படுத்தி விடுகின்றது. வாழுவோருக்கு வாழ்க்கை முழுவதும் மன வேதனையையும், அழியா ரணத்தையும், தீராப் பழியையும் ஏற்படுத்தி விடுகின்றது. இதில் பாதிக்கப்படும் குடும்பம், அவர்தம் வாரிசுகள், மற்றும் வாழ்க்கையினை எண்ணிப் பார்த்தால் அது எத்தகைய சீர்செய்ய முடியாத சீர்கேடு என்பது விளங்கும்.

கணவன் மனைவி என்னும் பரஸ்பர நம்பிக்கைக்கும், இல்லறம் என்னும் கட்டுக் கோப்பிற்கும், சமூகத்தில் இருக்கும் குடும்பங்களின், அங்கத்தினர்களின் பரஸ்பர நம்பிக்கைகளுக்கும், உறவுகள் என்னும் உன்னதத்திற்கும் உலை வைக்கும் சீர் கேடு, ஒழுங்கீனமே பிறன் மனை விழைவது. கற்பு எனும் ஒழுக்கம் இருபாலருக்கும் உரித்தது போன்றே, இச் சீர்கேடு, ஒழுங்கீனம் தவறுகின்ற இரு பாலருக்குமே பொருந்தும்.

முன்னர் காலங்களில் பெண்மை என்பது மென்மையானது; பலவீனமானது; மோகத்தையும், போகத்தையும் பார்த்த மாத்திரத்திலே ஆண்களிடம் உண்டாக்கிவிடக் கூடியது, முரட்டுத்தனத்தை, வெறியை, கிளர்ச்சியைத் தோற்றுவிக்கவும், தூண்டவும் வல்லது என்கின்ற காரணத்தாலேயே, பூப்படைந்த பெண்டிரை உரிய மனையாள் என்றாக்கி அவர்களை இல்லத்திற்குள் மட்டுமே; முகத் திரைகளுக்குப் பின்னர் மட்டுமே வாழும்படி செய்திருந்தது. அவை பெண்ணடிமைத் தனமென்று எண்ணுமளவில் அவர்களைப் பேதையர்களாய் ஆக்கியமையால் விடுதலை பெற்ற பெண்மை இன்னும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டி இருக்கிறது. இன்று எத்தனைதான் பெண்கள் முன்னேறி இருப்பினும், ஆண்களுக்குச் சமமாக ஒழுங்கீனத்தில் பங்கு பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகின்றது? இயற்கை அமைப்பில் பாதிப்பைப் பெறுவது பெண் தானே? வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத்தானே தண்டனை? வழுக்கி விழும் பெண்களுக்கு விமோசனம் ஏது? தவறிப் பெற்ற குழந்தைகளை வளர்க்க வழி தெரியாது, கொலை செய்தோ அன்றில் அனாதை ஆசிரமங்களிலோ அன்றில் அரசுத் தொட்டில்களிலோ போட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறுகளைத் தொடர்ந்து வாழும் வாழ்க்கையில் நிம்மதிதான் கிட்டி விடுமா? மனச் சாட்சிதான் சும்மா இருந்து விடுமா?. அடங்கி வாழாது, அற்ப சுகம் தேடி அலையும் ஆணோ, பெண்ணோ பரத்தையரை விடக் கேவலமானவர்கள்தானே?

கட்டிய கணவனிற்கும் அன்றில் மனைவிக்கும், பெற்ற பிள்ளைகளுக்கும், மனசாட்சிக்கும் செய்யும் நம்பிக்கைத் துரோகங்கள் மன்னிக்க முடியாதவை, பாவ விமோசனம் இல்லாதவை. ஏமாற்றி இன்பம் துய்ப்பது என்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதே. காம சுகம், இல்லற இன்பம் என்பவை வாரிசுகளை உருவாக்க மட்டுமே என்ற உணர்வு கொண்டோருக்கே அஃது சிற்றின்பம் என்பதும் அதை மீறிய வாழ்வு இலக்கு, பேரின்பம் என்பவை பற்றிய தெளிவும் தெரியும்.

இன்றையத் தமிழக ஜெண்டில் மேன்கள், ஓரக்கண்ணாலே பிள்ளைத் தாய்ச்சி செய்வதற்கும், உப்புக் கருவாட்டையும், ஊறவைச்ச சோற்றையும் தின்றுவிட்டு காதலி மார்புக்கு மத்தியில் செத்துப்போகவே விருப்பப்படுகிறார்களா? காமச் சுகமே வாழ்க்கையா? இதைத்தான் பெண்களும் விரும்புவார்களா? சொல் நளினமும், நாகரீகமும், கலாச்சாரமும் பழங்கதையா?

நல் ஒழுக்க முன்னேற்றம் என்பது ஆணுறை மாட்டிக் கொண்டு பாதுகாப்போடு தப்பு செய்வது அல்ல. தவறின் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்வதுமல்ல. தீயவற்றை மனத்தாலும், எண்ணத்தாலும் எண்ணாது இருப்பதே. மாசற்ற மனத்தோடு, கறை படியாத இல்லற வாழ்வு வாழ்ந்து உய்வதே. சுதந்திர உலகில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது அறிவீனம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நல் நெறியில் வாழுவதே அறிவுடைமை.

தன் தாய் எப்படி அப்பழுக்கற்ற பத்தினியாக இருத்தல் வேண்டும் என்று எண்ணிக் கொள்ளுகின்றவன் எவனோ, தன் குழந்தைகளின் தாய் எப்படி உத்தமியாக, கற்புடைப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் எவனோ அவன் கற்பைப் பழிக்கவோ, பெண்மையை இழிவாக்கவோ, இழிவாகக் கருதவோ, கற்புத் தவறுவதையோ அன்றில் பிறன் மனை விழைவதையோ செய்ய மாட்டான். தமது கற்பின் திறத்தில்தான் தனது குலத்தின், குடும்பத்தின், தனது கௌரவம் விளங்குகின்றது என்று ஆணித்தரமாக உணரும் பெண் மனத்தாலும் சோரம் போக மாட்டாள்.

எனவே முன்னேறிக் கொண்டிருக்கும் மனித குல மேம்பாட்டில், பிறன் மனை விழைவு என்னும் இக்கேடு இல்லாது இருத்தலே உண்மையான மேன்மையாகும். ஒழுக்கமுடைய சமூகத்தில், பண்பாடு மிக்க சமூகத்தில், கலாச்சார உயர்வு என்பது பரஸ்பர நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காது, ஒருவரை ஒருவர் மதித்து, சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும், குடும்பத்தாரும் பிறரை நம்பி ஒழுகுவதே. எனவே பிறன் மனை விழையாமை என்னும் ஒழுக்கம் என்றைக்கும், எக்காலத்திலும் மனிதருக்கு அவசியம்.

ஆணும், பெண்ணும் கூடி வாழ்ந்தாலும், தனித்து வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பங்களாக இருந்தாலும், இல்லங்களில் மட்டுமன்று, அலுவலகங்கள், வெளியிடங்கள் என்று எல்லா இடங்களிலும் மற்றைய அங்கத்தினரோடு, மனிதர்களோடு சமமாக, சங்கோஜமின்றி, நல்ல பார்வையோடு, கீழ்த்தர எண்ணமின்றி, கல்மிஷமற்ற நல் உள்ளத்தோடு, தவறாத ஒழுக்கத்தோடு திகழ அடிப்படையில் பிறன் மனை நோக்கா ஒழுக்கம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் அத்தியாவசியமானது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அடக்கத்துடன், இல்லற ஒழுக்கத்துடன் வாழுவதே நற் குடிப்பிறப்பின் அடையாளம்.

எனவே பழி, பாவத்திற்கு அஞ்சி ஒழுகும் பிறன் மனை விழையாமை என்னும் நல்லறத்தை வள்ளுவர் இங்கே இந்த அதிகாரத்தில், ஒழுக்கமுடைமை அதிகாரத்தைத் தொடர்ந்து, விளக்குகின்றார்.


ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 201
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

ஔவையார். கொன்றை வேந்தன்:
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 3
கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து
அப்புறந் தன்னில் அசையாமல் முன் வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின் வந்து உறங்குவளை
எப்படி நான் நம்பு வேன்? இறைவா கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 209
அழுக்கறத் தினக்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே.

பாம்பாட்டி சித்தர்:
பெண்ணாசை விலக்கம்: 50
வெயில்கண்ட மஞ்சள் போன்ற மாந்தர் அழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத்து ஓடும் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென்று ஆடுபாம்பே!

சுப்பிரமணிய பாரதி:
ஒழுக்கமுடைய நெஞ்சு வேணும்.

***


In English:

Not conducting adulterously with other's partner. Not attempting on wrong relations; extra marital affairs for the sexual desires.

In domestic life, sexual discipline is more important. That is one man and woman on mutually understanding each other with sincere love and compassion, only after the marriage recognized by the society, getting involved in sexual life. Also in the controlled proper domestic life, indulging, exchanging and enjoying the sex only between husband and wife.

In that, not changing the mind due to any low or high of the life, being faithful to the marriage made in front of the society. It is the virtue obeying sincerely the promise of marriage till the end of the life very firmly though happy or sorrow. In domestic life sex is merely a part. Though the husband or the wife is incapable of enjoying the sex, both should appreciate each other’s loyalty, faithfulness and should also keep up the sanctity of the marriage and continue to live the domestic life without the sex is the virtuous way of life.

Conjugal life, the sacred relationship, must be between the husband and the wife only. It is the sexual agreement. It is the discipline which should be there at always though they live apart or together or stay away from each other in different part of the world. That is the way of life which differentiates and elevates the human beings from the animals. This is the basic of humanity. This is the basement for the human culture.

Most of the birds live as one-to-one pairs in an unwritten code of ethics. They do not have adultery. May be that's why they are flying high which needs to be researched. "Andril" is a kind of bird which cannot live without its partner. It dies immediately once the partner dies, naturally. That is why it is called as "Andril" in Tamil which means 'inseparable' which cannot survive without its partner.

Human beings after civilized to live in society, after changing from the periods of winning the girl through fights, making love in hidden in privacy, living one-to-one as husband and wife, recognized as the life partners through the arrangement called marriage, having defined the family limits, appreciating the importance and differences dignity and indignity, enjoying the conjugal relationship, to produce the offspring is the elevated and cultured system of domestic way of life, which we live today.

In this system, the love crossing over the borders, the races, languages have been accepted many a times; but not the sex. 'Sex' only after marriage is the primary discipline for individuals. Sex before marriage is indiscipline. Similarly the greater indiscipline is the adultery after marriage. Seeking extramarital partnership with already married; indulging in sexual acts with other and improper relations and searching and embracing prostitutes, all are indiscipline only. And of course they are the sins.

Here thinking of others wife itself is the ill and degradation against the arrangement of family and foundation of the society. This is what which paves ways for disgraceful life, despicable offspring and the cultural deterioration and destruction. Just for a momentary mistake affecting not only one's self life, but also the others life, both the families happiness, and those family members life, bringing disgrace to all, many a times becomes the cause for the death of many. It makes the life hell. For those living it makes the entire life miserable, instills undying pain and never ending disgrace. By thinking of the life of those affected families and members one can understand the seriousness of this indiscipline.

The adultery is the most dangerous indiscipline which spoils and destroys the confidence and intimacy between the husband and wife, the well-nit structure of the family, the mutual faith of families of society and its members and the nobility of the relationships. Like the chastity which belongs to men and women, this indiscipline and disgrace also belongs to both the gender.

In the olden days womanhood was considered fragile, weak, induces lust and sexual desire instantly to the male, and creates rude, frenzy, obsession, excitement and uncontrolled behavior in them. And that is the reason the matured women were made to live only in-house as inmates; made to appear behind the screens and masks. Later that was realized by the feminine as slavery and atrocity and though got liberated from it, yet it is fighting to protect itself. Today though whatever be the women advanced, what is the greatness in leveling with the men equally in indiscipline? Is it not the woman who is affected naturally? When fly comes and drinks the honey, the punishment is only for the flower. Is it not? Is there liberation for the faulted and sinned women? Will there be peace in their life for those who have put their mistakenly born to death or to the Government's cradles or orphanages and continuing their mistakes? Will their conscience keep quiet? Are they not cheaper and inferior than the prostitutes that who without the self-control and searching to fulfill their silly sexual desires.

The betrayal for the married partner either husband or wife; to their own children; to their own conscience is unforgivable. That has no liberation at all. Cheating and enjoying is nothing but cheating the self. Only those who understand that the sexual carnal pleasure is only meant to produce the offspring can comprehend that they are petty happiness and will have clarity about the true happiness and the goal of life.

Are the Gentlemen of today making pregnant to women just by their canny looks or Are they interested only in eating meager food and dying in the midst of the breast of the women? Is the sexual pleasure alone Life? Will the women too like only this? Is the charm of the words, civilization and culture became old stories?

Advancement of good virtues does not mean to make the mistake wearing condom. Also it is not for conducting the abortion for the failed without anybody's knowledge. It is for not thinking of the ill in mind and heart for ever. It is to lead the blameless domestic Life with the pure mind. Live in whatever way you like in the free world is foolishness. This is how one should live with good virtues is the wiseness.

That who thinks and believes his mother should be of pure and flawless and that who wishes his children's mother to be as well pure and flawless in chastity, will never degrade the chastity nor talk ill of women, and will not go indiscipline and seek extra martial affair or do adultery. And that which strongly believes and thinks due to her strength of chastity alone that the prestige and dignity of her lineage and family is upheld will never do adultery even in her thinking.

Therefore in the advancing human race, the true advancement is to get rid of the bad evil called adultery. In the disciplined and civilized society, cultural development is not betraying the mutual faith and beliefs but respecting each other member of the society, each of the family. Hence the trait called the Faithfulness or the non-adultery is must for everyone at always at everywhere.

For the Male and Female whether they live together or apart, whether live in joint family or not, wherever they are whether in home or in office or outside or anywhere with other members, coexistent to behave equally, without any inhibitions and bad ideas, with pure heart and good intentions and unfailing discipline, the non-adultery is very essential trait for each and every individual. The symbol of good lineage is to control the desires through self-control, discipline and to live domestic way of life.

Therefore, to avoid the scaring adultery of disgrace and sin, Valluvar is explaining the faithfulness or the non-adultery virtues in this chapter following the Virtuousness spoken in the last chapter.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...