Saturday, November 21, 2009

திருக்குறள்:147 (பிறன் மனைவி நயவாத நல்லோர்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 147

பிறன் மனைவி நயவாத நல்லோர்...

In English

அறன் இயலான் இல்வாழ்க்கை என்பான் - பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.

பொழிப்புரை :
அறத்தின் இயல்பாளனாகி இல் வாழ்க்கை வாழ்பவன் என்பவன் - பிற[னி]ன் இயல்புக்குரியவளின் பெண்மையினை விரும்பாதவன்.

விரிவுரை :
அறத்தின் நல் இயல்போடு இல் வாழ்க்கை ஒழுகுபவன் என்பவன், பிறனின் இயல்புக்குரிய அவன் இல்லாளின் பெண்மையினை விரும்பாதவனாக இருப்பான்.

ஆக பிறன் மனை விழையாதவனே, நல் அறத்தின்கண் இல்வாழ்க்கை ஒழுகுபவனாம் என்பது மறை பொருள்.

பிறன் மனையாளை நயத்தல் என்பது தீய ஒழுக்கம். அஃது நல்லறத்தின் கண் வாழுபவரிடம் எங்ஙனம் இருக்கும்? எனவே இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல விழைவது நல்லறதின்பால் வாழும் நல்லவர்கள் என்போர் எப்போதும் தீய ஒழுக்கமாகிய பிறன் மனையாளை விரும்புவதைச் செய்யாமல் இருங்கள் என்பதே.

நல்லறத்தைப் பின்பற்றுவோர் பிறன் மனைவியை தாயாய், தமக்கையாய், தங்கையாய், மகளாய், மருமகளாய் மட்டுமே நோக்குவர், எண்ணுவர். தாயாராய் எண்ணுவது என்பது பெண்மைக்கு, தாய்மைக்குக் கொடுக்கப்படும் உயரிய மரியாதை. அம்மா என்பது எந்த வயதுப் பெண்ணையும் அழைக்கத் தகுந்ததே. அஃது உண்மையில் அழைப்பவரையும், அழைக்கப்படுபவரையும் போற்றுவிக்கும், சிறப்பிக்கும் முறையான விழிச் சொல்.

பிறவாறு அழைக்கப்படும் உறவுகளில் பிறத்தியாரின் பெண்ணை அழைத்துப் பெண் மோகம் கொள்வது நயத்தலல்ல, அதுவே கயமை. அத்தகைய உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கொள்கை நல்லறத்தார் மாட்டு இருப்பதில்லை.

குறிப்புரை :
நல்லறத்தை ஒழுகுபவர் பிறன் மனைவியை மோகிப்பதை விரும்பமாட்டார்.

அருஞ்சொற் பொருள் :
இயலான் - இயல்பானவன்

ஒப்புரை :

திருமந்திரம்: 177
கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.

திருமந்திரம்: 2615
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

ஔவையார். மூதுரை:
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 23
பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட் டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள் பறிக்க
எண்ணா துனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

பத்திரகிரியார். மெய்ஞ்ஞானப் புலம்பல்: 8
பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம்?

கால்காட்டிக், கைகாட்டிக், கண்கள் முகம்காட்டி,
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9

பெண்ணினல்லார் அசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக்கலந்திருப்பது எக்காலம்? 10

ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்? 208

சிவவாக்கியர்: 475
கள்ளவுள்ள மேயிருக்க கடந்த ஞானம் ஓதுவீர்
கள்ளமுள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லிரேல்
தெள்ளுஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 147

The virtuous never do adultery...
In Tamil

aRan iyalAn ilvAzhkkai enpAn - piRan iyalAL
peNmai nayavAthavan.

Meaning :
One who lives ever virtuously the domestic life never desires adulterously the other's wife.

Explanation :
That who leads life in good nature of virtuousness, will never desires the womanhood belonging to other's domain.

Therefore that which does not do adultery with other's wife is the one who leads life in good virtuousness is the implicit meaning here.

The desire for other's wife is very bad indiscipline. How can that be with the person who lives in good virtues? Therefore through this what Valluvar says is the message that those who are in good virtuous life, don't ever attempt to do bad discipline, the adultery of desiring other's wife.

That who follows good virtues will treat other's wife only as mother, elder sister or younger sister, daughter or daughter-in-law. Treating as mother is the regard and respect for the motherly nature of the woman. Calling as mother is appropriate for any age girl. That is actually a great word which appreciates both the caller and the calling person.

Calling through other relations for the neighbors or other's wife and desiring for her womanhood is really bad. It is what the vileness and the dishonest. Such ill behavior of differing in speech and deed will not be with the good virtuous people.

Message :
That who lives ever virtuously will never desire the womanhood of the other's wife.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...