Monday, November 2, 2009

அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை - முகவுரை

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

முகவுரை

Chapter : 14

Virtuousness

Preface

ஒழுக்கத்தை, நல் ஒழுங்கு முறையை, நன்னெறியை, நல்லறத்தை ஒழுகுதல், கடைப் பிடித்தல், மேற் கொண்டு உடையவர் என்பதாகும்.

முறையான செயல்பாடுகளே செயல்முறை என்பது ஒரு செயலிற்கு இருக்கும்போழ்து முறையற்று எந்தச் செயல்களையும் செய்யலாகாது. முறையோடு வினையாற்றினால் மட்டுமே ஒரு செயல் முழுமை அடையும்; வெற்றியும் பெறும். முறை தவறாது, வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், நன் நெறிக்கு உட்பட்டு செயல்படும் மனத்திடன், மற்றும் திறனே ஒழுக்கம்.

எக்காரணத்தைக் கொண்டும் முறையற்ற செயலையோ, எந்தச் செயலையும் முறையற்ற விதத்திலோ செயல் படுத்துவதில்லை எனும் ஒழுங்கே, வெற்றிப் பாதைக்கு முதல் படி. ஒழுங்கோடு நடத்தலின் மனத்திடத்தால், ஒழுங்கை மட்டுமே கடைப்பிடிப்பதால் எல்லாமே ஒழுங்காய் நடைபெறும். பிரச்சினைகள் என்பவை ஒழுங்கு தவறும் போதுதான் ஏற்படுகின்றன. எனவே பிரச்சினைகளை அலசி ஆராய்வதற்கும் கூட உரிய ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்தால் அதைக் கண்டுபிடிப்பதுடன் களைவதும் சுலபம். ஓர் இயந்திரம், பொறி எல்லாம் எப்படி ஓர் ஒழுங்கில் மட்டுமே இயங்குகின்றதோ அதைப் போலவே மனிதரும் கடைப்பிடிக்கவும், செயல்படுதலும் வேண்டும்.

உலகம், இயற்கை அதன் சுழற்சியில், பருவ கால மாற்றங்களில் ஓர் ஒழுங்கோடு செயல்படுகின்றது. அதைப் போலவே இயற்கையோடு இசைந்த மனித வாழ்வு முறையும் ஒழுக்கத்தோடு திகழ வேண்டுமென்பதே இயற்கை விதி. உதாரணத்திற்குப் பகலில் விழித்து, இரவில் உறங்கி, நேரத்திற்கு உண்டு, பருவத்தே பயிர் செய்து, நடு ஜாமத்தில் உறங்கி என்பவை யெல்லாம் ஒழுங்கு முறைகள் தானே.

சாலையைக் கடக்க குறியீடு செய்யப்பட்டிருந்தால் அவ்விடத்தில் மட்டுமே கடக்க வேண்டும். இன்ன வழியில், திசையில்தான் செல்ல வேண்டும் என்று முறைப் படுத்தப் பட்டிருந்தால் அதைத்தான் ஒழுக வேண்டும். குறுக்கில் நடப்பது, எதிர் திசையில் வண்டியைத் தள்ளுவது அன்றில் ஓட்டுவது என்பவை ஒழுங்கீனமே. எனவே இயற்கை விதிகளுக்கும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு நடத்தல் அவசியம். அப்போதுதான் அரசு எந்திரங்களும், சமூக இயக்கங்களும், ஏன் தனிமனித செயல்பாடும் சீராக இயங்கும்.

ஓர் ஒழுங்கீனம் ஏற்படுத்தும் இன்னல் எவ்விதம் இயந்திரத்தைப் பழுதாக்கி விடுகின்றதோ அவ்விதமே அரசு இயந்திரம், சமூக இயந்திரம், வாழ்வு இயந்திரம், பழுதாகிவிடாது சீருடன் திகழ, அதன் இயற்கை அமைப்பில் ஒழுங்கில் திகழ ஒவ்வொரு மனிதரும் அதற்கு இணங்கத் திகழ வேண்டுமென்பதே ஒழுக்கம் உடைமை.

அதைப் போலவே எதிலும் முறையோடு திகழுதல், முறையோடு செயல்படுத்துதல் என்பது உண்மையில் கடினமானதோ அன்றில் சிரமமானதோ அல்ல. உண்மையில் அதுவே இலகுவான வழியாகவும், ஏதுவான வழியாகவும், முறையான வழியாகவும் இருக்கும். குறுக்கு வழி என்பது சுலபமானதாகச் சில சமயங்களில் இருப்பினும், ஒழுங்கீனம் கருதிச் செய்யலாகாது. இதை அன்றாடச் செயல்களிலும் ஒழுகினால் வெற்றிப் பயணத்திலேயே எப்போதும் பயணிக்கலாம். அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். அன்றில் ஏற்படும் குழப்பங்களுக்குள்ளேயே மூழ்கி, தொடர் தோல்விகளிலும், பழுதுகளாலும் இயக்கமற்று, செயல்பாடற்று முடங்கிப் போக நேரும்.

எனவே திடமான மனத்துடன், ஒழுக்கத்திலிருந்து எக்காரணத்திற்கும் சிதறாத, சிதைவுறாத, தனிமனித ஒழுக்கமுடைமையே நல் சமுதாயத்தை, கலாச்சாரத்தை, வெற்றிகளை, முன்னேற்றங்களை, புதிய கண்டுபிடிப்புக்களை, மேம்பாட்டை நல்கும்.

சென்ற அதிகாரத்தில் அடக்கத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, ஒழுக்கமுடைமையின் அவசியத்தை இங்கே வள்ளுவர் தொடருகின்றார்.ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 208.
கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

திருமந்திரம்: 305.
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

திருமந்திரம்: 1877
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.

திருமந்திரம்: 2067
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

***


In English:

It is about preserving and adopting the good behavior, righteous conduct, good virtues and virtuousness.

When proper methodologies are defined as the procedure to do a thing, one should not do it improperly. Only when executed methodically the action or the deed gets completed in full sense and as success. Virtuousness, the discipline, or the good conduct is all about the will power, strength, adherence to the norms and skills and ability in executing each and every thing in life systematically within the framework of good virtues without any flaws.

First step to success is the discipline not to execute any wrong deeds and not to adopt any improper methods in any of the deeds let whatever be the reasons and conditions they impose. Everything will go proper when mental strength is there to do things only in order and when the procedures are followed meticulously. Problems arise only when discipline is failed. Therefore to study and analyze causes of the problems also when the right methods are systematically followed it becomes easier to identify and rectify.

One should follow and adopt the discipline just like any machinery how they work only on their intended disciplines. The world and the nature are running smoothly by the disciplines of their cycles of weather and periods. Likewise the life of human being which is closely associated with nature should also go in accordance and follow the discipline is the fate of nature. For example, awake during day time, sleep in the night, eating timely, agriculture in respective periods, sleeping in the mid night are accepted behavior and disciplines.

When there is exclusive marking for pavement walkers in the junctions, one should follow the same to cross across the roads. When there is direction marking or ways to follow certain direction it must only be followed. Walking haphazardly and pushing the carts in the opposite directions such are certainly indiscipline only. Therefore it is must and necessary to practice the nature's law and largely accepted social customs and norms. Then only the Government machineries and social activities, and even individual activities will go smooth.

A mal operation spoils a machine from its normal functioning, unlike that to function properly the machinery of government, social and life, without any flaws, to work smoothly in its normal course every human being should work in cohesion and adhering to the good principles is the virtuousness.

Same way, in fact it is not that hard or difficult to be systematic and methodical in anything. Indeed that would be easier, simple and right way to accomplish them. Though short cuts may look easy, indiscipline should never be adopted. When we adopt this principle in day-to-day affairs, we can always continue in success; we can also forward to next stages. Otherwise one has to groan and immerse within the same incomplete work, crippled and freeze due to confusions, continuing woes and failures and perhaps in-correctible mistakes.

Therefore with the strong mind to un-deviated and undistorted virtuousness and individual discipline to good behaviors only can create good society, culture, success, advancements, innovations and progresses.

Emphasizing the importance of self-control in the previous chapter, Valluvar continues the necessity of the disciplines here in this chapter.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...