Thursday, November 12, 2009

அதிகாரம்: 14. ஒழுக்கமுடைமை - முடிவுரை

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

முடிவுரை

Chapter : 14

Virtuousness

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

131 உயிரைக் காட்டிலும் முக்கியமானது ஒழுக்கம்.

Discipline is essential than Life.
132 அடிப்படைத் துணையான ஒழுக்கத்தை விருப்பத்துடன் ஒழுகிப் பாதுகாக்கவும்.

Practice and Preserve the discipline, the basic aid, with interest and liking.
133 நல் ஒழுக்கமே உயர்ந்த குடி எனும் தகுதியைத் தரும்; அல்லாதது பிறவியையே கேவலத்திற்கு உள்ளாக்கும்.

Good discipline alone gives the status of high class lineage; absence of it can downcast the birth itself.

134 மறந்து தவறிய ஒழுக்கத்தால் வாழ்வு, சீர்மை குன்றிக் கெடும்.

Life gets downcast indignity due to forgotten and neglected discipline.
135 ஒழுக்கம் உடைய நெஞ்சு ஆக்கத்தையும், உயர்வினையும் நல்கும்.

Disciplined mind benefits creativity and excellence.
136 ஒழுக்கம் வழுவினால் உண்டாகும் கேட்டை நினைந்துணர்ந்து மனத்தைத் திடப்படுத்தி ஒழுக்கத்தைத் தவறாது மேற்கொள்ளுதல் வேண்டும்.

Realizing the adversities of indiscipline become strong minded to follow the discipline scrupulously.
137 ஒழுக்கம் மேன்மை தரும்; ஒழுக்கமின்மை பொருந்தாப் பழியும் தரும்.

Discipline yields excellence; Indiscipline yields irrelevant blames too.
138 நல் ஒழுக்கம் நன்மையையும் தீ ஒழுக்கம் தீமையையுமே விளைவிக்கும்.

Good discipline yields goodness; bad conduct yields evils forever.

139 ஒழுக்கமுடையோர் தீச் சொற்களைத் தவறியும் சொல்லார்.

Disciplined do not utter ill even by slip of the tongue.
140 உலகோடு இணங்கி ஒழுகுவர் அறிவுடையோர்.

The wise will live in harmony with the world.

குறிப்புரை

ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் முக்கியமானது, அடிப்படையானது, அதை விருப்போடு ஒழுகிப் பேணுதல் வேண்டும். அஃதே உயர் குடி எனும் தகுதியையும், நன்மைகளையும் ஆக்கத்தையும், உயர்வினையும், மேன்மைகளையும் நல்கும்.

நல் ஒழுக்கத்தைப் பேணாது இருந்தால் அஃது பிறவியையே கேவலத்திற்கு உள்ளாக்கும்; ஒழுக்கத்தைப் பேண மறந்து ஒழுகினால் வாழ்வு சீர்மை குன்றிக் கெடும்; ஒழுக்கமின்மை பொருந்தாப் பழியையும், தீமையையும் நல்கும்.

ஒழுக்கம் வழுவினால் உண்டாகும் கேட்டை நினைந்துணர்ந்து, மனத்தைத் திடப்படுத்தி ஒழுக்கத்தைத் தவறாது மேற்கொள்ளுதல் வேண்டும். ஒழுக்கம் உடையோர் தீயவை பகராத அறிவுடையோராய் உலகத்தோடு ஒன்றி இணங்கி வாழுவர்.

Message

Discipline, the basic aid, is important than the Life; that must be practiced and preserved. That alone can give status of high lineage, goodness, creativity, excellence and exalt.

Absence of discipline downcast the birth itself; forgotten and neglected discipline disgraces the life and destroys; indiscipline renders unbearable incrimination, ills and indignity.

Considering the adversities of indiscipline one should become strong minded to adhere and follow the good discipline. The disciplined never speak ill; they are wise and go in harmony with the world.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...