Tuesday, November 24, 2009

திருக்குறள்:150 (தவறினும் பிறன் மனையாளை நயவாதே...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 150

தவறினும் பிறன் மனையாளை நயவாதே...

In English

அறன் வரையான், அல்ல செயினும், பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பொழிப்புரை :
அறம் வரைமுறையில் உள்ளோன் நல்லன அல்லவற்றைச் செயினும், பிறன் வரை முறைக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமை நன்று.

விரிவுரை :
அறத்தின் வரைமுறைக்குள் இருக்கின்றவன் நல்லன அல்லவற்றைச் செய்தாலும், பிறன் வரைமுறைக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் இருத்தல் நன்று.

நன்நெறியின் பால் இருப்போன் ஒழுக்கம் தவறி நல்லன அல்லவற்றைச் செய்ய நேர்ந்தாலும் கூடப் பரவாயில்லை, பிறனுக்கு உரியவளைப் பெண்டாள விரும்பாமை நல்லது. ஏனென்றால் அது அறமற்ற செயல்களிலும் தலையாயது என்பது மறை பொருள்.

மேலும் முன்னர் கூறியது போல், பிற அறமற்ற செயல்கள் இன்னொருவரைப் பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் பிறன் மனையாளைத் தழுவும் இழி செயல் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதித்து அழியாப் பழியையும் துன்பத்தையும் வழங்கும் ஆதலால் என்பதும் மறை பொருள்.

உதாரணத்திற்கு அறநெறி நிற்கும் பெரியோர் ஒருவர் யாரையோ காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லும் நிலை ஏற்படலாம். அவர் அச்சமயத்தில் ஒழுக்கம் தவறிச் செயலாற்றினும் அதன் நன்மை காரணமாக அவ்விதம் நடக்க வேண்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் போன்ற வரைமுறை தவறிய ஒழுங்கீனத்தைப் பழக்கப் படுத்திக் கொண்டு அவர் ‘பிறன் மனை விழைவதை’ செய்யாமல் இருத்தல் வேண்டும் என்பதே இக்குறளின் நோக்கம்.

ஆக நன்னெறியாளன் ஒழுக்கம் தவற நேர்ந்தாலும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

குறிப்புரை :
நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

அருஞ்சொற் பொருள் :
வரையான் - வரையறுத்தவன், வரைமுறைக்குள் இருப்பவன்.
நயவாமை - விரும்பாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

ஔவையார். நல்வழி:
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 18
வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடு வார், தினந் தேடிஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடு வார்விதி மாளுமட்டும்
ஏதுக் கிவர்பிறந்தார்? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 46
கறந்தபால் முலைப்புகா கடந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 150

Desire not adultery even on slip...
In Tamil

aRan varaiyAn, alla seyinum, piRan varaiyAL
peNmai nayavAmai nanRu.

Meaning :
Though one slips on the virtuous bounds for an evil act, it is good at least not to desire on other's wife.

Explanation :
Though the one who is within the limits of virtuousness slips for an evil deed, it is good not to desire the womanhood of she which belongs to other's bounds.

That who is in the good virtuousness, it is bearable even if he goes undisciplined but not doing the adultery. Because adultery is the worst of indiscipline is the implicit meaning.

As described somewhere earlier in this chapter, the other indiscipline deeds may not implicate or impact others largely. But the adultery with other's wife is the worst act which yields undying disgrace and sufferings to everyone related directly or indirectly in both families, are also the reason in the implied meaning here.

For example, the elderly man of the good, great virtuousness may have lied, slipping from the disciplines, to save someone. Though he may have slipped discipline from the propriety it might have been for the good cause. But taking such indiscipline as granted and as habit one should not get on to the impropriety of adultery is the purpose of this Kural.

Therefore the good virtuous though slips in his propriety, it is good not indulge in adultery.

Message :
Though may arise a need to slip from virtuous path, it is good not to desire on other's wife.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...