Wednesday, November 18, 2009

திருக்குறள்:144 (மதிப்பு இழக்கும் செயல்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 144

மதிப்பு இழக்கும் செயல்...

In English

எனைத் துணையர் ஆயினும் என்னாம்- தினைத் துணையும்
தேரான், பிறன் இல் புகல்?

பொழிப்புரை :
எத்துணைப் பெரியவர் ஆயினும் பயன் என்னவாம்? ; தினை அளவும் சிந்தியாமல் பிறன் மனை புகுந்து பெண்டாளுபவன்.

விரிவுரை :
தினை அளவும் யோசிக்காது பிறன் மனை புகுந்து அவர் மனைவியைப் பெண்டாளுபவன், எத்துணை பெரியவராக இருப்பினும் என்ன பயன்?

அவன் கடைந்தெடுத்த அயோக்கியனே. அவனது பெரிய தன்மை எந்த வகையில் உபயோகமானது? அவ்வாறு பிறன் மனை புகுபவன், பெரிய மனிதர் என்னும் தகுதி இழந்து கீழ்மகனாக ஆகிவிடுவான்.

சமூக அந்தஸ்தில்; பதவியில், மதிப்பில், தகுதியில் உயர்ந்தோராக எத்துணைப் பெரியவனாக இருப்பவனாகினும், கொஞ்சமும் சிந்தியாது பிறன் மனை விழைபவன், அவை எவற்றாலும் பயனிலாது, கீழ்மகனாக; தாழ்ந்தவனாகக் கருதப் படுவான்.

பிறன் மனை விழைதல் என்பது எத்தகைய மனிதராகினும், எவ்வளவு பெரியவராகினும் தவறானதே. அஃது அவரை அவமானத்திற்கு உள்ளாக்கி, அவரது தகுதியை, பதவியை, பிறவியை, குலத்தை கௌரவத்தைக் கேவலப்படுத்தி விடும். அமெரிக்க ஜனாதிபதியாகினும், காஞ்சிப் பீடாதிபதியாகினும், திருச்சி சாமியாராகினும், திருப்பத்தூர் மந்திரியாகினும், திருநெல்வேலி பாதிரியாராகினும் அவர்களின் சிந்தனையற்ற காம விழைவால், செயல்களால் ஏற்பட்ட களங்கமும் அவமானமும் எக்காலத்திலும் மறைந்துவிடுமா? அவர்கள் வகித்த பதவிகளால் வரலாறான கேவலத்தை, தீராப் பழியை அழித்துவிட முடியுமா? கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் கிட்டிய அவப்பெயர் போய்விடுமா?

எனவே பெரிய மனிதர்கள் என்னும் தகுதி படைத்தோர், தங்கள் மரியாதைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பிறன் மனை விழையாதிருத்தல் வேண்டும் என்பது மறை பொருள்.

குறிப்புரை :
பிறன் மனைவியை பெண்டாள நினைப்பவன் தனது பதவியை, மதிப்பை, மரியாதையை இழப்பான்.

அருஞ்சொற் பொருள் :
தேரான் - சிந்த்தித்துத் தேர்வு செய்யாதவன்,

ஒப்புரை :

திருமந்திரம்: 205
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

ஔவையார். ஆத்திச்சூடி:
97. மோகத்தை முனி.

ஔவையார். கொன்றை வேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்

ஔவையார். நல்வழி:
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 17
பொல்லா இருளகற்றும் கதிர் கூகையென் புண்கண்ணினுக்கு
அல்லா இருந்திடு மாறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்!
எல்லாம் விழிமயக்கே இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 265
வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பவங்களில்
வீசிமேல் நிமிர்ந்த தோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 144

Disgraceful act called adultery...
In Tamil

enaith thuNaiyar Ayinum ennAm- thinaith thuNaiyum
thErAn, piRan il pukal?

Meaning :
However big they are, what is the use by their greatness when they indulge in mindless adultery with other’s wife?

Explanation :
What does he make, however big is he when he indulges in adultery by entering other's premises without even thinking the size of a millet?

Certainly he is a dishonest person. In what way his greatness was useful? Such as that who enters other's house for adultery, will lose his highness and big-name and become as lowest of all.

Let however big or great in social status, power, respect and position when one does adultery mindlessly, without any regards for of his bearings, he will be disrespected and treated as low and inferior.

Adultery is wrong with regard to any person regardless of their greatness or statuses. That would render them mean and dishonor and disgrace their status, position, birth and lineage. The blemish and disgrace created by the mindless act of the American President, Kanchi Mutt Chief, Saint of Trichy and Bishop Father of Thirunelveli, will ever disappear? Were their positions or statuses whatever they possessed able to help them to erase the disgrace registered in the history? By offering in crores will the bad names and remarks obtained go away?

Therefore the people who enjoy the high status, at least to protect their own respect should not indulge in adultery is the implied meaning.

Message :
That who indulges in adultery with other's wife will go disgraced by losing his status, position and respect.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...