Thursday, November 5, 2009

திருக்குறள்:134 (ஒழுக்க மறதி இழுக்கு...)

அதிகாரம்

: 14

ஒழுக்கமுடைமை

திருக்குறள் : 134

ஒழுக்க மறதி இழுக்கு...

In English

மறப்பினும், ஓத்துக் கொளல்ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

பொழிப்புரை :
[கற்றதை] மறந்தாலும் மீண்டும் ஓதிக் [கற்றுக்] கொள்ளக் கூடும்; ஒழுக்கதைத் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவன் ஒழுக்கம் குன்றினால், அவனது பிறப்பே இழிவுற்று மீண்டும் சீர் செய்ய இயலாதவாறு கெடும்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
மனிதன் கற்றதை மறந்தாலும் கூட மீண்டும் படித்துக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் ஒழுக்கத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய பணியில் இருப்பவன் ஒழுக்கம் குன்றினால், அவனது பிறவியே இழிவுற்றுச் சரிப்படுத்த இயலாதவாறு சீர் கெடும்.

முன்னர் குறளீல் இழிந்த பிறப்பாய், ஒருவனது பிறவிக் குலமே சந்தேகத்திற்குள்ளாவது போல, ஒழுக்கத்தை அமல் படுத்த வேண்டியவனே ஒழுக்கம் குன்றினால் அவனது பிறவியின் நோக்கமே கெட்டு அவன் வாழ்வு வீணாகிவிடும் என்பது பொருள். பிறவியின் நோக்கம் கட்டறுத்து முக்தி பெறலே. ஆனால் ஒழுக்கம் குன்றியவனிற்கு அவ்வாறு முக்தி பெற இயலாது வாழ்க்கைப் பிறவி கெட்டுவிடும்.

கற்ற கல்வியைக் கூட மறந்து, மீண்டும் படித்துக் கற்றுக் கொண்டுவிட முடியும். ஆனால் மறந்தும் கூட ஒழுக்கதை ஒழுகாது இருத்தல் ஆகாது, ஏனென்றால் அவ்வாறு ஒழுகாது இருந்தால் தவறிய ஒழுக்கத்தைச் சீர் படுத்தவே முடியாது. எனவே ஒழுக்கத்தைப் பேணாததற்கு மறதியைக் காரணப் படுத்தக் கூடாது என்பது மறை பொருள்.

அதாவது ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், பழக்கத்தால் செயல்படுத்தப்படும் ஒழுக்கமே சாலச் சிறந்தது, மற்றும் அதை மறுக்கவோ, மறக்கவோ கூடாதது என்பதும் இங்கே மறை பொருளே.

குறிப்புரை :
மறந்து தவறிய ஒழுக்கத்தால் வாழ்வு, சீர்மை குன்றிக் கெடும்.

அருஞ்சொற் பொருள் :
ஓத்துக் கொளல் - ஓதிக் கொளல்
பார்ப்பான் - பார்க்கின்றவன், பார்க்கும் பணியினைச் செய்கின்றவன், மேற்பார்வையிடுபவன்.

ஒப்புரை :

திருமந்திரம்: 2085
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

திருமந்திரம்: 2086
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.

திருமந்திரம்: 2087
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

திருமந்திரம்: 2088
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

திருமந்திரம்: 2089
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

திருமந்திரம்: 2090
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே.

ஔவையார். ஆத்திச்சூடி:
50. செய்வன திருந்தச் செய்.

ஔவையார். கொன்றை வேந்தன் :
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

***

In English:

Chapter : 14

Virtuousness

Thirukkural : 134

Forgetting Discipline is indignity...
In Tamil

maRappinum, Oththuk koLal Akum; pArppAn
piRappu ozhukkam kunRak kedum.

Meaning :
One who forgets the readings can recollect it by re-reading; but that who is assigned to supervise the discipline when falls short of discipline in his own conduct, gets irreparable downcast indignity to his lineage.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
One who forgets the readings can recollect it by re-reading; but that who is on duty to supervise the discipline when falls short of discipline in his own conduct, gets irreparable downcast indignity to his lineage.

As described in the previous Kural explanation, one's ancestral lineage itself is doubted, when one that is suppose to implement discipline fails in his own discipline, his birth goal of liberation gets spoilt is the meaning. Goal of the birth is only to get the liberation, but when one falls short in the discipline he can't attain the liberation and hence his current life or the birth gets simply wasted.

Learnt education when forgotten can be recollected by studying it again. But by mistake one should not forget to practice the discipline because if not done so it cannot be restored at all. Therefore for ignoring or missing the discipline one should not blame the memory or remembrance is the implicit meaning here.

Actually than the education which comes through study, the discipline which comes through the practice is much greater and hence it should not be ignored or forgotten is also the implicit meaning here.

Message :
Life gets downcast indignity due to forgotten and neglected discipline.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...