Wednesday, November 25, 2009

அதிகாரம்:15. பிறனில் விழையாமை - முடிவுரை

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

முடிவுரை

Chapter : 15

Non-adultery

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

141 நன்னெறி அறிந்தோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார்.

Those who know the virtues will never even think of others wife in bad intentions.
142 அறமற்ற அறிவீனத்தில் பிறன் மனவியை மோகிப்பதே பெரிய அறிவீனம்.

Among the stupidity of non virtuousness, having lust for others wife is the greatest one.
143 நம்பிய நல்லவரின் இல்லாளைத் துரோகமாய்த் தீதுசெய்த இழிந்த நண்பர் இறந்தவரே.

The ill friend who did treacherous adultery with the wife of the most trusted is the dead only.

144 பிறன் மனைவியை பெண்டாள நினைப்பவன் தனது பதவியை, மதிப்பை, மரியாதையை இழப்பான்.

That who indulges in adultery with other's wife will go disgraced by losing his status, position and respect.
145 எளிதெனத் துய்க்கும் பிறன் மனை இன்பம் அழியாப் பழியைத் தவறாது கொடுக்கும்.

The adultery considered easy with other's wife shall certainly result in imperishable disgrace.
146 பிறன் மனை விழைபவனிடத்தே பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கும் விடாது குடியிருக்கும்.

With the adulterers of other's wife, hatred, sin, fear and disgrace - these four will dwell for ever without leaving.
147 நல்லறத்தை ஒழுகுபவர் பிறன் மனைவியை மோகிப்பதை விரும்பமாட்டார்.

That who lives ever virtuously will never desire the womanhood of the other's wife.
148 சான்றோரின் பிறன் மனையாளை எண்ணாது திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு.

The propriety of not adulterous look on other's wife by the wise is their significance of noble manliness.

149 அச்சுறுத்தும் பிணிகள் நிறைந்த உலகில் நோயற்ற உடல் நலம் விரும்புவோர் பிறன் மனையாளைத் தழுவார்.

Those who want no ill but the health in this dreadful disease filled world will not do adultery with other's mate.
150 நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமை நன்று.

Though may arise a need to slip from virtuous path, it is good not to desire on other's wife.

குறிப்புரை

நல்லறமற்ற ஒழுக்கத்தின் அறிவீனங்களில் பிறன் மனைவியை மோகிப்பதே பெரிய அறிவீனம். அத்தகைய அறிவீனத்தால் பதவியை, மதிப்பை, மரியாதையை இழக்க நேரும். மேலும் எளிதென எண்ணி பிறன் மனைவியை அடைய நேர்ந்தால் அழியாப் பழியே மிஞ்சும். பிறன் மனை விரும்புபவனிடம் பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கு குற்றங்களும் விடாது குடியிருக்கும். நம்பிய நல்லவரின் மனைவியைத் துரோகமாய்த் தீதுசெய்த இழிந்த நண்பர் உயிர் இருப்பினும் இறந்தவரே.

நன்னெறியை அறிந்தோர், ஒழுகுவோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார். அவ்வாறு திகழும் ஆழ்ந்த ஒழுக்கமே அவரது பேராண்மை எனும் சிறப்பு. அச்சுறுத்தும் பால்வினைப் பிணிகள் நிறைந்த உலகில் நோயற்ற உடல் நலம் விரும்புவோர் பிறன் மனைவியை விரும்பார். நன்னெறியின் பால் இருப்பார் நல் ஒழுக்கம் தவற நேரினும் பிறன் மனையாளை விரும்பாமையே நன்று.

Message

Lust for others wife is the stupidest indiscipline in non virtuousness. Due to such adultery one has to lose his status, position and respect. Also the easily assumed adultery will result only in never dying disgrace for sure. The adulterers of others wife will have hatred, sin, fear and disgrace living with them forever. The ill friend who committed treacherous adultery with the most trusted is considered dead though he survives.

Those who know or practice the virtuousness will never even think of others wife with any bad intentions. Such good practices and virtues only termed as their noble manliness and gains significance and praises. In this dreadful venereal disease filled world, those who want good health will not do adultery with others wife. That who is with good virtues though may slip from virtuous path for some reason; it is good not to do adultery, the sin of desiring someone else's wife.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...