Sunday, November 29, 2009

திருக்குறள்: 151 (இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...)

அதிகாரம்

: 16

பொறையுடைமை

திருக்குறள் : 151

இகழ்வாரைப் பொறுக்கும் பெருந்தன்மை...

In English

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

பொழிப்புரை :
[தன் மேல் குழி வெட்டித்] தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போல, தம்மை இகழ்பவரைப் பொறுப்பது தலையாய பண்பு.

விரிவுரை :
தன்னை அகழ்ந்து பிளப்பவரையும் தாங்கிக் கொண்டிருக்கும் நிலம்போல, தம்மை இகழ்ந்து தூற்றுபவரையும் பொறுத்துக் கொள்வது மனிதருக்குத் தலையாய பண்பாகும்.

தம்மை இகழ்பவரையும், துன்புறுத்துவோர் நிகழ்த்தும் இன்னல்களையும் பொறுத்துக் கொள்ளுவதால் பண்படப் போவது தாமே என்ற நல்லெண்ணம் கொண்டால், அவர்களையும் மதித்து, அவர்தம் இகழ்ச்சியையும் தாங்கும் தன்மை வந்து விடும். தாழ்த்தினாலும், வீழ்த்தினாலும், தட்டினாலும், குட்டினாலும், பிட்டாலும், சுட்டாலும், சுருக்கினாலும், விரித்தாலும் புடம்போடப்படும் தங்கங்கள் பொறுமை இழப்பதில்லை. அழுத்தங்களைத் தாங்கிய ஆன்மாக்களே நல் வைரங்களாகி மின்னுகின்றன.

எனவே இகழ்பவரை நோவதால் விரிசல்களே பெருகும். ஆக்கபூர்வ எண்ணம்போய் தாக்கும் தன்மை வந்து பாழே மிஞ்சும். இவை பொறுமை அற்ற சிறியோர் மேற்கொள்ளும் வழி. மாறாக பொறுமை கொண்டு, காரியத்திற்குதவாத வாதத்தைத் தள்ளி, தேவையற்ற வசவுகளைப் புறந்தள்ளி, உண்மைகளை மட்டும் உய்த்துணர்வதே மேம்பட எண்ணும் மேலோர் கொள்ளும் வழியாகும். அறியாமையால் தூற்றுவோரையும், பிதற்றுவோரையும், அறிவற்று உளருவோரையும் பொருட்படுத்தாது அன்பும், கருணையும் கொண்டு விட்டுவிடுவதால், நேரமும் காப்பாற்றப்பட்டு, நேரிய சிந்தனைப் பாழ்படாது செயலாற்ற இயலும்.

பொறுமை, அமைதி, அஹிம்சை என்பவை தோற்கும் செயற்பாடுகள் அல்ல. அவையே உண்மையில் வெற்றிகள், வெற்றியின் படிக்கட்டுக்க்கள்.

வெற்றிகள் குவிந்து, உங்களின் செயற்பாடுகள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நாளில், அவதூறு பேசியவர்களெல்லாம் நாணித் தலை குனிவர். பொறுமையின் பெருமை அன்று உங்களையே சாரும்.

எனவே இகழ்பவரைத் தாங்கும் நற்குணமாகிய பொறுமையைக் கொள்ள, எதையும் தாங்கும் பூமியைப் போன்ற பெருந்தன்மை வேண்டும் என்பதே இங்கு மறை பொருள்.

குறிப்புரை :
தம்மை இகழ்பவரைப் பொறுத்தல் தலையாய அறம்.

அருஞ்சொற் பொருள் :
வரையான் - வரையறுத்தவன், வரைமுறைக்குள் இருப்பவன்.
நயவாமை - விரும்பாமை

ஒப்புரை :

பழமொழி:
பொறுத்தார் பூமி ஆழ்வார்.

திருமந்திரம்: 539..
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் . நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

திருமந்திரம்: 1109.
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35

திருமந்திரம்: 1116.
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42

திருமந்திரம்: 1117.
உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43

மாணிக்கவாசகர். திருவாசகம்:
6. நீத்தல் விண்ணப்பம் :

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110

ஔவையார். ஆத்திசூடி:
24. இயல்பலா தனசெயேல்.
30. அறனை மறவேல்.
35. கீழ்மை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

ஔவையார். மூதுரை:
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

***

In English:

Chapter : 16

Forbearance

Thirukkural : 151

Scorn bearing magnanimity...
In Tamil

akazvAraith thAngkum nilam pOla, thammai
ikazhvAraip poRuththal thalai.

Meaning :
Like the earth which bears those who digs on her, bearing those who scorn on our self is the prime of virtues.

Explanation :
Like the earth bearing those dig on her, forbearing those scorn on our self is the primary of virtues.

When you take it in good sense and think that bearing with those who despises you and their ill treatments is only going to refine yourself, you automatically get the quality to respect them too and forbearance to with stand their scorns. Though lowered or laid, stroked or pocked, split or burnt, shortened or extended the purifying gold ones never lose their endurance or disposition. The souls which withstood the pressures only shine ever as diamonds.

Therefore, by hurting the scorners only the split widens and differences grow. The positive sense goes away but offending sense comes and only ruins remain. These are the methods adopted by small and petty minded who do not have patience. Instead with the patience, avoiding the useless arguments, rejecting the unnecessary slanders and perceiving only the truths are the ways adopted by the wise who wish to get improved. Considering with love, kind and compassion and by ignoring those slandering and blabbering ignorant, those non-sense uttering idiots, one can save the time and also without affecting the positive mind can continue the work as well.

Forbearance, peace and non-violence are not the deeds of failure. These are the real winnings and steps to the victory.

When you have gathered winnings and your triumph is acknowledged by the society, those who scorned will stand in shame with bowing their head. The greatness of forbearance will be yours on that day.

Therefore to have the good bearing with the scorners, one should have the greatness like the earth which withstands anything is the implicit meaning here.

Message :
To bear the scornful men is the prime virtue.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...