Friday, June 12, 2009

திருக்குறள்: 1. எழுத்தெல்லாம் முதலில் இறைவனுக்கே!

 

அதிகாரம்

:

1.

கடவுள் வாழ்த்து

திருக்குறள்

:

1.

எழுத்தெல்லாம் முதலில் இறைவனுக்கே!

 

 

 

In English

 

 


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே, உலகு.

 

பொழிப்புரை :

அகரம் முதலாகத் தொடர்ந்த எழுத்துக்களெல்லாம், மூலமுதல்வனின் முதற்கண் பொருட்டே, உலகில் உள்ள.

 

விரிவுரை :

முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ் வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப் போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன்.

ஆனால் வள்ளுவரின் இக்குறளில் அவ்வகையானத் தொடர்பற்ற தன்மையில் இருவரிகளும் இருப்பதையோ அல்லது இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதையோ என்னால் பார்க்க இயலவில்லை.

 

அதாவது, "சென்னை தமிழகமானிலத்தின்தலைநராக இருப்பதுபோல் டெல்லி இந்தியாவின் தலைநகரமாக இருக்கிறது" என்று ஒருவர் சொன்னால் "சரி, இருக்கட்டுமே! அதற்கென்ன இப்பொழுது" என்றுதான் கேட்கத் தோன்றுமே தவிர அதில் என்ன பெரிய தத்துவம் இருந்துவிடும்தமது முதல் குறளில் மிகச்சிறந்த திருவள்ளுவர் இவ்வளவு அபத்தமாகத் துவங்குவாரா?

இருப்பினும் தெய்வம் உலகத்திற்கு முதற்றேபோலும் அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் தலை என்றும் கொள்வதிலும் தவறும் இல்லை தான். ஆயின் கடவுள் வாழ்த்து என்றுச் சொல்லிய பிறகு, தெய்வத்தைத் தொழாதே எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையைச் சொல்லவேண்டிய அவசியம் யாது?

எனவே அகர முதல உள்ள எழுத்துக்கள் எல்லாம், ஆதி பகவன் எனும்படியான மூலமுதல்வனாகிய கடவுளை முதன்மைப் படுத்தி அவரை அறியும் அல்லது வணங்கும் அல்லது வாழ்த்தும் பொருட்டே உலகில் உள்ளன அல்லது உலகில் உண்டாக்கப்பட்டன எனப் பொருள் கொள்ளலாம்.

அகர முதலிய எழுத்துக்கள் அனைத்தும் இறைவன் பால் படைக்கப்பட்டன என்பதே சரியான பொருள்.

சைவ நெறியே முதல் நெறியாக இருத்தலின் அக்கருத்துக்களை திருக்குறளில் ஒப்பீடு செய்து காட்ட முயற்சித்துள்ளேன். எனவே அவ்விதம் நோக்குங்கால், அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவனாகிய அரனை முதற்கண் கொண்டே உலகாயத்தம் ஆகியது என்று உறுதியுடன் சொல்லலாம்.

மேலும் இது அகரத்தைத் துவங்கும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதும் உட்பொருள். இதன் மூலம் இறைவனிற்கு இன்ன மொழிதான் உகந்தது எனும் வாதத்திற்கும் பதில் தந்திருக்கின்றார் வள்ளுவர்.

எழுத்துக்களும், மொழிகளும் மனிதனால் படைக்கப்பட்டவையே. அவை அனைத்துமே இறைவனை, மூலத்தை, ஞானத்தை அறியவே ஏற்படுத்தப்பட்டன. எனவே அவற்றுள் பேதம் கொள்வதும், தேவ மொழிகள் என்பதும், இன்ன மொழிதான் இறைவனிற்கு உகந்தது என்பதும் தவறு. மனிதனால் துவங்கப்பட்ட அனைத்து மொழிகளும் இறைவனிற்கு உகந்தவையே.

உலக மொழிகள் அனைத்தும் பெரும்பாலும் அகரத்திலேயே துவங்குகின்றன. அவை மனிதனின் முதல் ஒலியாகவும், அன்னையைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள். தமிழில் அது அன்னையையும், அப்பனையும், அரனையும், அம்மையையும், ஓம் காரத்தின் (அஉம் ) முதல் ஒலியாகவும் முதல் எழுத்தாகவும் விளங்குகின்றது. உலக மொழிகளின் முதல் எழுத்து அகரமாயினும், ஒவ்வொரு மொழியின் இறுதி எழுத்தும் வேறுபடுகின்றன. எனவேதான் வள்ளுவர் அகரம் முதல் தொடங்கி னகரவரையிலுமான எழுத்துக்கள் அனைத்தையும் என்று சொல்லாது அகரமுதல எழுத்தெல்லாம் என்று அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்படி முதல் குறளை அமைத்துள்ளார். வள்ளுவரின் இத்தகைய நுட்பம் மிகவும் போற்றுதற்குரியது. மேலும் வள்ளுவர் முதல் குறளை தமது தாய்மொழியின் முதல் எழுத்தான அகரத்தில் துவங்கி, கடைசிக் குறளின் கடைசி எழுத்தைத் தமிழின் கடைசி எழுத்தான 'ன்' னில் முடியுமாறு அமைத்துள்ளமையால் இத்தகையவாறு மொழி எண் கணிதத்தை இலக்கியத்தில் அமைத்த வகையிலும் முன்னோடியாக விளங்குகின்றார்.

மனிதன் இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தே, எதையெல்லாம் வெல்ல இயாலாததோ, விளங்காததோ அவற்றை எல்லாம் இறை என்று கொண்டான். அவ்வாறே அத்தகைய இறையை அறிதலே மனிதனின் முதல் அறிவுத்தேடலாகவும் இருந்தது. எனவே மொழியின் கண்டுபிடிப்பும், கல்வியின் நோக்கமும், அறிவின் தேடலும் அனைத்தும் இறைவனை நோக்கியே இருந்தன. தனது கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்து பின் வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்லவே எழுத்துக்கள் தோன்றின.

மனிதனால் சமைக்கப்பட்டவை இறைவனுக்குப் படைக்கப்படுவது வழக்கம்தானே. எனவே மனிதனின் அத்தகைய கண்டுபிடிப்பை, மொழியை அதாவது எழுத்துக்களை முதற்கண் மூலப்பொருளாகிய இறைவனுக்கே முதற் குறளில் அர்ப்பணித்துத் தம் பணியைத் துவக்குகின்றார் வள்ளுவர். மூல முதல்வனைத் தொழுது, அவர்க்கு மொழியையே படையலாக்கி, எழுத்துக்களை அர்ப்பணித்துத் தொடக்குதலும், தொடருதலும் மிகவும் சரியான முறைதானே.

 

குறிப்புரை :

அனைத்து எழுத்துக்களும், மொழிகளும் இறைவனை முன்னிறுத்தியே உலகில் படைக்கப்பட்டு உள்ளன.

 

அருஞ்சொற் பொருள் :

ஆதி: மூலம், முதல், தொடக்கம், அடிப்படை, மூத்த
பகவன்: பகுத்தவன், படைத்தவன், இறைவன், கடவுள், முதல்வன், தலைவன்

மூல-முதல்வன் என்றால் வேறு கிளை முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று கொள்ளுதல் தவறு. அதாவது இறைவனை அனைத்திற்கும் மூத்தவராக, முதல்வராகச் சிறப்புச் செய்கிறார் என்று கொள்க.

 

அவையடக்கம் :

இவ்விதமாக இந்த முதல் குறளிற்கான கருத்தை நான் மட்டுமே முன்வைப்பதாக நினைக்கிறேன். இது எனக்கு முன்னோடிகளைத் தவறென்று சொல்லி எனது மேதமையைக் காட்ட நிச்ச்யம் பதிக்க வில்லை. என் கருத்திலும் தவறில்லை என்று எண்ணுவதாலும் இதுவே பொருத்தமானதாக இருக்கக் கூடுமோ என்று எண்ணுவதாலுமே பதிக்கின்றேன் என்பதைத் தன்னடக்கத்துடனும் அவையடக்கத்துடனும் தெரிவிக்கின்றேன்.

 

ஒப்புரை :

திருமந்திரம்: 15
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

ஔவையார். கொன்றைவேந்தன்: 7
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

 

•••

 




Chapter

:

1.

The Praise of The God

Thirukkural

:

1.

All letters belong firstly for the Lord!

 

 

 

In Tamil

 


akara muthala ezhuthellaam Athi
bagavan muthatrE ulaku.

 

Meaning :

All letters starting from the letter "A" (aharam), are primarily created for the Primordial GOD in this world.

 

Explanation :

Although Valluvar wrote this first Kural under the title “The Praise of The God”, Instead of “the alphabet characters starting from ‘A’ were created to glorify God”,  “’A’ is the first letter to start alphabets, and likewise the world is based on God” is what all the annotators and commentators have given explanations in similar way. I assume that most of them just simply followed the Parimel Azhagar’s comments as the base one.


But I don’t see such any comparison or unconnected two lines in this kural by Valluvar.


That is to say, if one says, “Delhi is the capital of India as Chennai is the headquarters of the state of Tamil Nadu”, it will just make one to ask as “Well, let that be! So what now?” except, what great philosophy can there be on it? Is there anything in it that praises the Lord, worships, or means anything best? Would such a great Thiruvalluvar start so absurdly in his first Kural verse?


However, there is nothing wrong with assuming that the deity is the head in the world simlar to ‘A’ In alphabet as the first . But, after saying that “Prayer to God’” as the title of the chapter, why Thiruvalluvar in his first kural itself would go away from the subject of praying the God but would say the primacy of the ‘A’ in the alphabets? That doesn’t make any sense. Valluvar won’t be so aloof in his first kural.


Therefore it should be read as “All the letters starting from ‘A’ are meant for the Primordial GOD in this world”. All alphabet letters are dedicated for Him or for understanding Him or to pray Him or meant to praise Him. That is why they are created or existing in this world. This is how one should interpret the meaning for this kural.


Hence ‘All letters, starting from “A” are made for the sake of GOD’ is THE correct meaning.


Since Saivam being the first ethics, I have tried to compare its ideas in Thirukural. Therefore from that perspective, we can certainly map it to say that All letters starting from “A” are for the purpose of Adhi Bagavan, the Aran (Sivan), the Primordial GOD.


The implication is that this applies to all languages which begins with ‘A’ (aharam) in its alphabets. Through this Valluvar also has given an answer to the argument that which language is suitable for the God.


Letters and languages are man-made. They were all created to know the God, the root source, the wisdom. Therefore, it is wrong to discriminate between them, differencing as the languages of the Gods and which language is best for the Lord. All man-made languages are pleasing to the God and are suitable for prayer.


All world languages often start with the  ‘A’ (aharam) only in their alphabets. They are considered to be the first sound of man and refer to the mother. In Tamil it means mother, father, aran, ammai, the first sound and first letter of om kara (aum). Although the first letters of the world’s languages start from ‘A’ (aharam) in alphabets, the final letters of each language differs. That is why Valluvar did not say all the letters are from the ‘A’ alphabet till the N (nagaram), but stated in his first Kural as all letters starting from the first ‘A’ syllable such as to apply to all the languages. Such a nicety by Valluvar is highly commendable. And also  Valluvar begins his first Kural with the first syllable in his native language and ends last Kural with the last syllable ‘n’ in alphabets of Tamil. Hence with such arrangements he is also the pioneer in formation of the linguistic arithmetic (numerology?) in the literature.


At a time when man was advancing in competition with the nature, he considered everything invincible or incomprehensible to be the God. Likewise, knowing such a God is man’s first search for the knowledge. So the invention of language, the purpose of education, the search for knowledge was all towards the God. The alphabets were born to record his discoveries and carry them on to the future generations.


Is it not customary for man-made foods to be offered to the God? So Valluvar begins his work by dedicating such an inventive language of man, that is, the alphabets, to the primordial God in the first verse. Is it not the most appropriate way to worship the original deity first, offering the language itself, dedicating the alphabet letters, and to begin and continue the great work?

 

Message :

All letters and languages are created in this world only to put forth the Primordial God.

 

Note :

Thus, in this way, I think I am the only one presenting this kind of interpretation for this first Kural, I suppose. This is certainly not a post to show off my genius by saying that my forerunners were wrong. I declare here with most respect and humbleness that I have imprinted with the impression that there is nothing wrong with my opinion and that this may be the most appropriate.

 

References :

Thirumanthiram: 15
Adhiymai Aranai udaluL nindRa
vEdhiyu mAivirinthu Arnthu Irunthaan aruL
Sothiyu mAisurungaathathOr thanmaiyuL
nIthiyu mAiniththa mAki ninRanE.

Thirumanthiram: 15:
Blossoms As All
Into Brahma did He expand, into Hara did He,
And into the soul of the body He pervades
As the Effulgence Divine, the Dharmic law limitless,
The Eternal and the Everlasting.

 

avvayAr. Kondrai vEndhan: 7
Number and Letter deserve to be the eyes.

 

•••

 

3 comments:

Anand Viswanathan said...

naan tamizh ezhuthukkalil ingu karuththai therivikka edhenum vazhi undaa?(google transliterator lendhu copy paste panna mudiyavillai)

Anand Viswanathan said...

இந்த பொருள் விளக்கம் அருமையாக பொருந்துகிறது முதல் குறளுக்கு. அகாரம் மொழிகளின் பொது தொடக்கம் என்பதும் நல்ல குறிப்பு. நான் மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

அகார ஷப்தம் நாராயணனைக் குறிக்கும் என்பது திண்ணம். இது மறைகளின் தேர்ந்த கருத்து .அதனால் அதுவும் ஒரு நிலையில் பொருளாகும் . பல படிகளாக பொருள் கூறவல்ல நூல்களையே பெரியோர்கள் அமைத்தனர் . உதாரணமாக திருவாய்மொழி பிரபந்தத்துக்கே ஐந்து உரைகள் உண்டு . ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை இவைகளிலிருந்து நாம் அறியலாம் .அதனால் நல்ல கருத்தை வெளியிடவல்ல எந்த ஏற்ப்புடைய விளக்கம் கொடுக்கவும் யாரும் தயங்க வேண்டாம் என்பது என் கருத்து .

Uthamaputhra Purushotham said...

நன்றி, ஆனந்த் விஸ்வநாதன் அவர்களே, முதல் கமெண்ட்டைப் பதிப்பித்ததற்கு மற்றும் உங்களின் வாழ்த்துக்களுக்கு.

இங்கேயே கமெண்டில் தமிழில் எழுதுமாறு செய்தால், அதை ஆங்கில எழுத்துக்களை தேவைப்படும்போது ஏற்றுக் கொள்வதில்லை. எனவே NHM Writer அல்லது பராகா எனும் மென்பொருட்களில் எதாவது ஒன்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். (இது மற்றவர்களுக்கு)

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...