: |
1. |
கடவுள் வாழ்த்து |
|
திருக்குறள் |
: |
1. |
எழுத்தெல்லாம் முதலில் இறைவனுக்கே! |
|
|
|
அகர முதல வெழுத்தெல்லா
மாதி |
|
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி |
|
பொழிப்புரை : |
அகரம் முதலாகத் தொடர்ந்த எழுத்துக்களெல்லாம், மூலமுதல்வனின் முதற்கண் பொருட்டே, உலகில் உள்ளன. |
|
விரிவுரை : |
முதற் குறளாகிய இந்தக் குறள் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பின் கீழ்
வள்ளுவர் எழுதியிருந்தும் அனைத்து உரையாசிரியர்களும், "கடவுளைப்
போற்றவே எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டுள்ளன" என்பதை
ஏனோ, எழுத்துகளெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன;
அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது எனும் விளக்கத்தையே
தருகின்றனர். பெரும்பாலும் அனைவரும் பரிமேலழகர் உரையினை அடியொற்றியதாகவே கருதுகின்றேன்.
அதாவது, "சென்னை தமிழக மானிலத்தின் தலைநராக இருப்பதுபோல் டெல்லி இந்தியாவின் தலைநகரமாக இருக்கிறது"
என்று ஒருவர் சொன்னால் "சரி,
இருக்கட்டுமே! அதற்கென்ன இப்பொழுது" என்றுதான் கேட்கத்
தோன்றுமே தவிர அதில் என்ன பெரிய தத்துவம் இருந்துவிடும்? தமது
முதல் குறளில் மிகச்சிறந்த திருவள்ளுவர் இவ்வளவு அபத்தமாகத் துவங்குவாரா? |
|
குறிப்புரை : |
அனைத்து எழுத்துக்களும், மொழிகளும் இறைவனை முன்னிறுத்தியே உலகில் படைக்கப்பட்டு உள்ளன. |
|
அருஞ்சொற் பொருள் : |
ஆதி: மூலம், முதல், தொடக்கம், அடிப்படை, மூத்த |
|
அவையடக்கம் : |
இவ்விதமாக இந்த முதல் குறளிற்கான கருத்தை நான் மட்டுமே முன்வைப்பதாக நினைக்கிறேன். இது எனக்கு முன்னோடிகளைத் தவறென்று சொல்லி எனது மேதமையைக் காட்ட நிச்ச்யம் பதிக்க வில்லை. என் கருத்திலும் தவறில்லை என்று எண்ணுவதாலும் இதுவே பொருத்தமானதாக இருக்கக் கூடுமோ என்று எண்ணுவதாலுமே பதிக்கின்றேன் என்பதைத் தன்னடக்கத்துடனும் அவையடக்கத்துடனும் தெரிவிக்கின்றேன். |
|
ஒப்புரை : |
திருமந்திரம்:
15 |
|
••• |
: |
1. |
The Praise of The God |
|
Thirukkural |
: |
1. |
All letters belong firstly for the Lord! |
|
|
|
akara
muthala ezhuthellaam Athi |
|
Meaning : |
All letters starting from the letter "A" (aharam), are primarily created for the Primordial GOD in this world. |
|
Explanation : |
Although Valluvar wrote this first Kural under the title “The Praise of The God”, Instead of “the alphabet characters starting from ‘A’ were created to glorify God”, “’A’ is the first letter to start alphabets, and likewise the world is based on God” is what all the annotators and commentators have given explanations in similar way. I assume that most of them just simply followed the Parimel Azhagar’s comments as the base one.
|
|
Message : |
All letters and languages are created in this world only to put forth the Primordial God. |
|
Note : |
Thus, in this way, I think I am the only one presenting this kind of interpretation for this first Kural, I suppose. This is certainly not a post to show off my genius by saying that my forerunners were wrong. I declare here with most respect and humbleness that I have imprinted with the impression that there is nothing wrong with my opinion and that this may be the most appropriate. |
|
References : |
Thirumanthiram: 15
avvayAr. Kondrai vEndhan: 7 |
|
••• |
3 comments:
naan tamizh ezhuthukkalil ingu karuththai therivikka edhenum vazhi undaa?(google transliterator lendhu copy paste panna mudiyavillai)
இந்த பொருள் விளக்கம் அருமையாக பொருந்துகிறது முதல் குறளுக்கு. அகாரம் மொழிகளின் பொது தொடக்கம் என்பதும் நல்ல குறிப்பு. நான் மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
அகார ஷப்தம் நாராயணனைக் குறிக்கும் என்பது திண்ணம். இது மறைகளின் தேர்ந்த கருத்து .அதனால் அதுவும் ஒரு நிலையில் பொருளாகும் . பல படிகளாக பொருள் கூறவல்ல நூல்களையே பெரியோர்கள் அமைத்தனர் . உதாரணமாக திருவாய்மொழி பிரபந்தத்துக்கே ஐந்து உரைகள் உண்டு . ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை இவைகளிலிருந்து நாம் அறியலாம் .அதனால் நல்ல கருத்தை வெளியிடவல்ல எந்த ஏற்ப்புடைய விளக்கம் கொடுக்கவும் யாரும் தயங்க வேண்டாம் என்பது என் கருத்து .
நன்றி, ஆனந்த் விஸ்வநாதன் அவர்களே, முதல் கமெண்ட்டைப் பதிப்பித்ததற்கு மற்றும் உங்களின் வாழ்த்துக்களுக்கு.
இங்கேயே கமெண்டில் தமிழில் எழுதுமாறு செய்தால், அதை ஆங்கில எழுத்துக்களை தேவைப்படும்போது ஏற்றுக் கொள்வதில்லை. எனவே NHM Writer அல்லது பராகா எனும் மென்பொருட்களில் எதாவது ஒன்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். (இது மற்றவர்களுக்கு)
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...